PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிவு!

தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் ஏற்றமான போக்கு ஆகியவற்றால் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிந்தன.

DIN

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்தும், கச்சா எண்ணெய் விலை குறைவு மற்றும் உள்நாட்டு பங்குகளில் ஏற்றமான போக்கு ஆகியவற்றால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிந்தன.

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு போன்ற வலுவான உள்நாட்டு அடிப்படைகளும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக உயர்த்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.29 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.96 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.42 ஐ தொட்ட நிலையில், முடிவில் 38 காசுகள் உயர்ந்து ரூ.85.03 ஆக முடிந்தது.

கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.41 ஆக இருந்தது.

இதையும் படிக்க: மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT