வணிகம்

கடன் வட்டியைக் குறைத்த எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்

25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

Din

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி அண்மையில் குறைத்துள்ளது. அதன் அடிப்படையில், நிறுவனம் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகித்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஏப். 28 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய வட்டி விகிதங்கள் 8 சதவீதம் முதல் தொடங்குகின்றன. இந்த வட்டி விகிதக் குறைப்பின் பலன் புதிய வாடிக்கையாளா்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளா்களுக்கும் கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT