மும்பை: இன்றைய வர்த்தகத்தில் உலோகம், ஆட்டோ பங்குகள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் 419 புள்ளிகள் உயர்ந்து 81,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 157.40 புள்ளிகள் உயர்ந்து 24,722.75 புள்ளிகளாக நிறைவடைந்தது.
இன்றைய இன்ட்ராடே அமர்வில், நிஃப்டி 169.3 புள்ளிகள் உயர்ந்து, 24,734.65 என்ற உச்சத்தை எட்டியது.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், பிஇஎல், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் பவர் கிரிட், எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்த நிலையில் பவர் கிரிட் கார்ப், எச்டிஎஃப்சி வங்கி, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, அப்பல்லோ மருத்துவமனைகள் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஆகஸ்ட் 02-ஆம் தேதியன்று ரூ.3,366.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலோகம் மற்றும் ஆட்டோ துறைகளில் வலுவான செயல்திறனால் உள்நாட்டு பங்குச் சந்தை உயர்ந்து முடிவடைந்தன. பலவீனமான அமெரிக்க டாலர், வலுவான மாதாந்திர ஆட்டோ விற்பனை மற்றும் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் காலாண்டு முடிவுகள் ஊக்கமளித்ததால் இந்தத் துறைகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் வெகுவாக உயர்ந்தது.
பங்குச் சந்தையில், ரயில்டெல் கார்ப்பரேஷனின் பங்குகள் ரூ.166 கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றதால் அதன் பங்குகள் 3% உயர்ந்தன.
ஜூலை மாத சரக்கு கையாளுதல் தரவுகளால் அதானி போர்ட்ஸ் பங்குகள் 3% உயர்ந்தன. பன்னாட்டு நிறுவனமான ஹர்ஷா இன்ஜினியர்ஸ் இன்டர்நேஷனலின் பங்குகள் 2% அதிகரித்த நிலையில் பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் பங்குகள் ரூ.190 கோடி ஆர்டரைப் பெற்றதையடுத்து அதன் பங்குகள் 4% அதிகரிப்பு.
டாடா ஸ்டீல் பங்குகள் வலுவான காலாண்டு முடிவுகளால் 4% உயர்ந்தன. எம்.சி.எக்ஸ். பங்குகள் வலுவான காலாண்டு முடிவுகளாலும், 1:5 பங்கு பிரிப்பு அறிவிப்பாலும் அதன் பங்குகள் 5% உயர்ந்தன.
ஸ்டார் சிமென்ட், சிசிஎல் புராடக்ட்ஸ், டிவிஎஸ் மோட்டார், ஆனந்த் ரதி, ஜேகே சிமென்ட், நுவோகோ விஸ்டாஸ், போஷ், எச்டிஎஃப்சி ஏஎம்சி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் தொட்டன.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பொதுமான அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றால் பெடரல் வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இருப்பினும் அதிபர் விதித்த அதிக கட்டணங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர்.
ஆசிய சந்தைகளில், ஹாங்காங் ஹேங் செங், தென் கொரியா கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிந்து முடிந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் ஆகஸ்ட் 02 அன்று சரிந்து முடிந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.15 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $68.87 ஆக உள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.