பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவில் தொடங்கிய நிலையில் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,987.56 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 251.00 புள்ளிகள் அதிகரித்து 85,357.81 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77.85 புள்ளிகள் உயர்ந்து 26,063.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 4 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் டிசிஎஸ் , ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், எடர்னல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், டிரென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ் பிவி, என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்து வருகின்றன.
துறைகளில் நிஃப்டி ஐடி அதிகபட்சமாக 1.5% வரை உயர்ந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.