பங்குச் சந்தை வர்த்தகம் இன்று(வியாழக்கிழமை) சரிவில் தொடங்கிய நிலையில் சற்றே ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,987.56 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 300 புள்ளிகள் வரை அதிகரித்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 158.51 புள்ளிகள் அதிகரித்து 85,265.32 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47.75 புள்ளிகள் உயர்ந்து 26,033.75 புள்ளிகளில் நிறைவடைந்தது.
கடந்த 4 நாள்கள் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று சற்றே ஏற்றத்துடன் முடிந்தது முதலீட்டாளர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸில் டிசிஎஸ் , ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, பாரதி ஏர்டெல் ஆகிய அதிக லாபத்தைப் பெற்றன.
மாருதி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன், எடர்னல், கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளிட்டவை அதிக இழப்பைச் சந்தித்தன.
துறைகளில் நிஃப்டி ஐடி அதிகபட்சமாக 1.41% வரை உயர்ந்தன. நிஃப்டி மீடியா பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காய் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு பெற்றன. அதேநேரத்தில் ஜப்பானின் நிக்கி 225, ஹாங்காங்கின் ஹேங் செங் நேர்மறையாக முடிந்தன. ஐரோப்பா பங்குச் சந்தைகளும் உயர்ந்து வர்த்தகமாகின. அமெரிக்க சந்தைகள் நேற்று(புதன்கிழமை)உயர்ந்து முடிவடைந்தன.
கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.38 சதவீதம் உயர்ந்து 62.91 அமெரிக்க டாலராக உள்ளது.
இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 90.41 வரை சரிந்த நிலையில் வர்த்தக நேர இறுதியில் ரூ. 89.96 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.