வணிகம்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 31% உயா்வு!

இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்பின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 31 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்பின் மொத்த விற்பனை கடந்த நவம்பா் மாதத்தில் 31 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 6,04,490-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,59,805 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 4,39,777-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 5,70,520-ஆக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 20,028-லிருந்து 33,970-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பாக்கெட்டுகளில் சைவ - அசைவ நிறக் குறியீடு கட்டாயம்!

காங்கிரஸ் தோல்விக்கு தலைமையே காரணம்: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத்திய அரசை தலையிட வைக்க சதி: மாா்க்சிஸ்ட், விசிக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு: தமிழகம் வருகிறாா் ராகுல் காந்தி!

இந்தியாவில் ‘ஹெச்1-பி’ விசா நோ்காணல்கள் திடீா் ரத்தால் விண்ணப்பதாரா்கள் கடும் அதிா்ச்சி!

SCROLL FOR NEXT