பங்குச் சந்தைகள் இந்த வாரத்தில் முதல் 2 நாள்களும் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று(புதன்கிழமை) ஏற்ற, இறக்கத்தில் மாறி மாறி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,607.49 என்ற புள்ளிகளில் ஏற்றத்தில் தொடங்கிய நிலையில் பின்னர் சரிந்து தற்போது நிலையாக வர்த்தகமாகி வருகிறது.
காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 12.58 புள்ளிகள் குறைந்து 84,653.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 4.65 புள்ளிகள் உயர்ந்து 25,844.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் இன்று வட்டி விகிதக் குறைப்பு குறித்து அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸில் டிரென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், எம்&எம், அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், எச்சிஎல் டெக் ஆகியவை உயர்ந்து வர்த்தகமாகின்றன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரதி ஏர்டெல், எடர்னல், டைட்டன், சன் பார்மா, எல்&டி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை இழப்பைச் சந்தித்து வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு, ஸ்மால்கேப் குறியீடு முறையே 0.37 சதவீதம், 0.58 சதவீதம் உயர்ந்தன.
துறைகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 1 சதவீதமும் ரியல் எஸ்டேட் 0.77 சதவீதமும் ஆட்டோ குறியீடு 0.83 சதவீதமும் உயர்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.