மும்பை: உள்நாட்டில் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததும் மற்றும் டாலருக்கான தொடர் தேவை உள்ளிட்டவையால் இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து, அதன் வரலாறு காணாத புதிய குறைந்தபட்ச அளவான ரூ.91.01ஆக நிறைவடைந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகராக அதன் முந்தைய முடிவிலிருந்து 36 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவான ரூ.91.14 ஐ எட்டிய நிலையில், பிற்பகுதியில் ஓரளவு மீண்டது.
கடந்த 10 நாள் வர்த்தக அமர்வில், ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.90-லிருந்து ரூ.91 ஆக சரிந்துள்ளது. அதே வேளையில், இந்த மாதம் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.92 என்ற எல்லையைக் கடக்கக்கூடும் என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.87 ஆக தொடங்கி, ரூ.90.76 முதல் ரூ.91.14 என்ற வரம்பில் வர்த்தகமாகி, அதன் முந்தைய முடிவிலிருந்து 23 காசுகள் சரிந்து ரூ.91.01 ஆக நிலைபெற்றது.
நேற்று (திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.78 ஆக நிலைபெற்றது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.