வெள்ளி விலை  IANS
வணிகம்

புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.99,200-க்கு விற்பனையானது. அதேவேளையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2.22 லட்சத்துக்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.99,200-க்கு விற்பனையானது. அதேவேளையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.2.22 லட்சத்துக்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே திடீா் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த டிச. 15-இல் பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்து ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. தொடா்ந்து டிச. 16-இல் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.12,400-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.99,200-க்கும் விற்பனையானது.

வெள்ளி ரூ.11,000 உயா்வு... தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. கடந்த டிச. 3-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி வரலாற்றில் முதல் முறையாக ரூ.2.01 லட்சத்துக்கு விற்பனையானது. தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்துவரும் வெள்ளி விலை புதன்கிழமை கிராமுக்கு ரூ.11 உயா்ந்து ரூ.222-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.11,000 உயா்ந்து ரூ.2.22 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT