புதுதில்லி: அரவிந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம், அரவிந்த் யூத் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஃபிளிப்கார்ட் குழுமத்திற்குச் சொந்தமான 31.25% பங்குகளை ரூ.135 கோடிக்கு வாங்க உள்ளதாக இன்று தெரிவித்தது.
அரவிந்த் யூத் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'ஃபிளையிங் மெஷின்' என்ற பெயரில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
2025ல் மார்ச் முடிய வரையான நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.432.16 கோடி வருவாய் ஈட்டியதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே வேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஃபிளையிங் மெஷின் பிராண்ட் டிஜிட்டல் தளங்களில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பிராண்டாக தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
ஃபிளிப்கார்ட் குழுமத்துடனான எங்கள் உறவு தொடரும். இதன் மூலம் நுகர்வோர் விரும்பும் தளங்களில் ஃபிளையிங் மெஷின் தயாரிப்புகளைத் தொடர்ந்து வாங்க முடியும். இதனிடையில், இந்த பிராண்ட் சேனல்கள் மற்றும் இணையதளத்திலும் நுகர்வோருக்குக் கிடைக்கும் வகையில் உள்ளதாக அரவிந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான அமீஷா ஜெயின் தெரிவித்தார்.
இந்த பரிவர்த்தனை நிறைவடையும் போது, அரவிந்த் யூத் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 31.25% அரவிந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தும்.
இந்த பரிவர்த்தனை டிசம்பர் 29, 2025 அன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தலா ரூ.10 மதிப்புள்ள 1 பங்கு மற்றும் தலா ரூ.100 மதிப்புள்ள 58,95,852 கட்டாயமாக மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.