எச்.பி. நிறுவனம் 250ஆர் ஜி10 என்ற புதிய மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. 14வது தலைமுறை இன்டல்கோர் 3 புராசஸர் கொண்டதால், பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எச்.பி. நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஏற்ப மடிக்கணினிகளை தயாரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது 250ஆர் ஜி10 என்ற புதிய மடிக்கணினியை வெளியிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
15.6 அங்குல எச்.டி. திரை கொண்டது. 1366 x 768 பிக்சல் திறனுடன் கண்களை கூசாத திரை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.7 GHz டர்போ பூஸ்டர் கொண்டதால், இணையத்தை எந்தவித தடையுமின்றி பயன்படுத்தலாம்.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 250 nit திறன் வழங்கப்பட்டுள்ளது
512 GB நினைவகம் வழங்கப்பட்டுள்ளது. இதனை 1 டிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
விண்டோஸ் 11 ப்ரோ இயங்குதளத்தில் செயல்படும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 - 8 மணிநேரம் நீடிக்கும்.
குறைந்த எடை (1.5 கிலோ) உடையதால் பயன்படுத்துவதற்கு எளிமையானது.
2 யூஎஸ்பி போர்ட், டைப்-ஏ போர்ட், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், டைப்-சி போர்ட், ஒரு ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதன் விலை ரூ. 45,990.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.