வணிகம்

உலகளாவிய வங்கிக்கு விண்ணப்பித்த உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி!

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி இன்று உலகளாவிய வங்கி உரிமத்திற்கான விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி இன்று உலகளாவிய வங்கி உரிமத்திற்கான விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வங்கியின் நீண்டகால பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தால் வங்கியின் பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும். யுனிவர்சல் பேங்கிங் உரிமம் அங்கீகரிக்கப்பட்டால், தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதி சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தி, தீர்வுகளை வழங்கும் அதே வேளையில் யுனிவர்சல் வங்கிகளின் வரிசையில் அடி எடுத்து வைக்க தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு, ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது, யுனிவர்சல் வங்கி உரிமம் கோரி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தது.

ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளாவிய வங்கிகளாக மாற குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.1,000 கோடி உள்ளிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் சிறு நிதி வங்கிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.

இதையும் படிக்க: அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT