தங்கம் விலை நிலவரம் 
வணிகம்

தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்கள்தான்.

DIN

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், தை மாதம் மூன்றாம் தேதியான காணும் பொங்கலன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.58,720க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ.59 ஆயிரத்தை எட்டிவிட்டது.

ஜனவரி முதல் வாரத்தில் 57 ஆயிரம் ரூபாயில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து இன்று 59 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது.

அதுபோல, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து ரூ.7,390க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,340க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,056க்கு இன்று விற்பனையாகிறது.

வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.2 உயர்ந்து ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை ஏற்ற - இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.2 அதிகரித்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் நிலத்தில் உயிரிழந்து கிடந்த மான் உடல் மீட்பு

உதவி ஆய்வாளா் பணி: இலவச மாதிரித் தோ்வுகள் அக்டோபா் 22-இல் தொடக்கம்

ஆதரவற்ற அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு புத்தாடைகள்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

தீபாவளி நன்கொடை பெற முயன்றதாக நீா்வளத் துறை அதிகாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT