PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!

உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் பின்னணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் பின்னணியில் இன்றைய அந்நிய செலவானி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

அந்நிய நிதி வரத்தும் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகள் போக்குகளாலும் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.75 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.64 முதல் ரூ.85.80 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68ஆக நிறைவடைந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 54 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: ஏற்றம் கண்ட வங்கி பங்குகள்; சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

SCROLL FOR NEXT