விவோ எக்ஸ் ஃபோல்ட் 5  படம் / நன்றி - விவோ
வணிகம்

விவோவில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை தெரியுமா?

விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனக் கிளைகளிலும், ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் தற்போது விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 என்ற மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே இதில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 16GB உள் நினைவகம் மற்றும் 512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ.149,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன், குவால்கம் ஸ்நாப்டிராகன் 8, 3ஆம் தலைமுறை புராசஸர் உடையது.

  • 16GB உள்நினைவகம் கொண்டது. 1TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

  • பின்புறத்தில் 50MP முதன்மை கேமராவுடன் IMX921 என்ற சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஜூம் செய்து போட்டோக்களை துல்லியமாக எடுப்பதற்காக 50MP கேமராவுடன் IMX882 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் செல்ஃபிக்காக 20MP கேமரா உள்ளது.

  • அல்ட்ரா எச்.டி. அம்சத்தில் அனைத்து வகையான போட்டோ / விடியோக்களை எடுக்க இயலும்.

  • 20.38cm அதாவது 8.03 அங்குல அமோலிட் திரை கொண்டது.

  • திரை பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. பிரகாசமாக இருக்கும் வகையில் 4,500 nits திறன் கொண்டது.

  • கண்ணாடி இழையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் உள்ளது.

  • ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்யும் வகையில் 6000mAh பேட்டரி திறன் வழ்ங்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 80W திறனும், வயர் இல்லாமல் சார்ஜ் செய்ய 40W திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 20 டிகிரி வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • நீர் புகாத்தன்மைக்காக IPX8 திறனும் தூசு படியாத தன்மைக்காக IPX9 திறனும் ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்

Vivo X Fold5 Launched in India with 50MP Camera

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைஷாலி முன்னிலை!

ரூ.85 லட்சத்தில் எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு

கோப்பையை தக்கவைத்தாா் சபலென்கா!

வரலாறு படைத்தது இந்திய ஆடவா் அணி! உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்!

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

SCROLL FOR NEXT