எம்ஜி எம்9 இவி  படம்: எம்ஜி
வணிகம்

எம்ஜியின் புதிய எலக்ட்ரிக் சொகுசு கார்! ஒருமுறை சார்ஜ் செய்தால் 548 கி.மீ. பயணம்!

எம்ஜி எம்9 இவி காரின் சிறப்பம்சங்கள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

எம்ஜி நிறுவனம் தனது ப்ரீமியம் எலக்ட்ரிக் சொகுசு காரான எம்9 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் மேக்சஸ் மிஃபா 9 என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் காரை இந்தியாவின் எம்9 இவி என்ற பெயரில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஜூலை 21 முதல் எம்9 காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 10 முதல் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • 7 சீட்டர் வசதி கொண்ட இந்த காரின் அனைத்து சீட்டுகளுக்கும் ஏர் பேக் வசதி இருக்கின்றன.

  • 90 கேடபள்யூஎச் பேட்டரி ஒற்றை மின்சார மோட்டாருடன் வழங்கப்படுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 548 கி.மீ. செல்லும்.

  • தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, காரின் இரண்டாவது வரிசைக்கு திரைகள், மசாஜ் செயல்பாடுகளுடன் ஒட்டோமான் இருக்கைகள், ஏசி வென்ட்கள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

  • மெட்டல் பிளாக், வெள்ளை நிறம் - கருப்பு ரூஃப், கிரே நிறம் - கருப்பு ரூஃப் ஆகிய நிறங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

  • சொகுசான பயணத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த காரின் நீளம் 5,270 மி.மீ., 2,000 மி.மீ. அகலம், 2,840 மி.மீ. உயரம்.

  • டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்பிளே, 360 டிகிரி கேமிரா, ஏர் ஃபில்டர், வயர்லெஸ் சார்ஜர், 13 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்.

  • முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு வாழ்நாள் பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

  • இந்தியாவில் சென்னை உள்பட 13 நகரங்களில் 14 டீலர்கள் மூலம் மட்டுமே எம்9 விற்பனை செய்யப்படுகிறது.

  • இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 69.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MG has launched its premium electric luxury car, the M9, in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

SCROLL FOR NEXT