சமையல் எண்ணெய் கோப்புப் படம்
வணிகம்

இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

இறக்குமதி வரி 10% குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை 56% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

கொல்கத்தா: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை 56 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில் சமையல் எண்ணெய் விலை கிட்டத்தட்ட 17 சதவிகிதம் உயர்ந்த நிலையில், தற்போது விலைகள் இறுதியாக குளிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது மேலும் ஒற்றை இலக்காகக் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் இமாமி அக்ரோடெக் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுதாகர் ராவ் தேசாய்.

இந்த விலை குறைவு சுமார் பதினைந்து நாட்களில் சில்லறை விலைகளில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மொத்த சந்தையில் ஏற்கனவே விலைகள் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் தென்பட்டுள்ளன என்றார் கிழக்கு இந்தியாவின் முன்னணி பிராண்டட் சமையல் எண்ணெய் உற்பத்தியாளரின் நிர்வாகி.

கொள்கை மாற்றம் இந்தியாவின் சமையல் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலுக்கு புதிய உயிர் அளிக்கும் வகையில், இறக்குமதியைச் சார்ந்து இல்லாத கடுகு எண்ணெயும், ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக 34 சதவிகிதம் குறையக்கூடும் என்றார் தேசாய்.

கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 12.5 சதவிகிதத்திலிருந்து 22.5 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து உள்நாட்டில் சுத்திகரிப்பதை கணிசமாக செலவு குறைந்ததாக மாற்றியுள்ளது. அதே வேளையில் 10 சதவிகித வரி குறைப்பு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் ஹால்டர் வென்ச்சர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேஷப் குமார்.

சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகிய இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகள் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை!

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

SCROLL FOR NEXT