vie_0709chn_1 
வணிகம்

வோடபோன் ஐடியா பங்குகள் 2% மேல் உயர்ந்து முடிவு!

வோடபோன் ஐடியாவின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டு, வர்த்தக முடிவில் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தது.

DIN

புதுதில்லி: வோடபோன் ஐடியாவின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டு, வர்த்தக முடிவில் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தது.

கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியாவை, திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட 1 சதவீத பங்குகளை ரூ.428 கோடிக்கு எரிக்சன் இந்தியா விற்பனை செய்ததையடுத்து வோடபோன் ஐடியா பங்கின் விலை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்து.

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய காலை வர்த்தகத்தின் போது பங்கின் விலை 1.91 சதவிகிதம் சரிந்து ரூ.6.65 ஆக இருந்தது. அதே வேளையில் என்எஸ்இ-யில் இது 1.77 சதவிகிதம் குறைந்து ரூ.6.65 ஆக இருந்தது. பின்னர் நடைபெற்ற வர்த்தகத்தில் மீட்டெழுந்து ரூ.6.91 ஆக முடிவடைந்தது.

பிஎஸ்இயில் மொத்த ஒப்பந்தத் தரவுகளின்படி, எரிக்சன் இந்தியா, மும்பையைச் சேர்ந்த வோடபோன் ஐடியாவின் 63.37 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்பனை செய்தது. இது வோடபோன் ஐடியாவின் 0.9 சதவிகித பங்குகள் ஆகும். பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.6.76 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதன் பரிவர்த்தனை மதிப்பு ரூ.428.44 கோடி.

கடந்த வாரம், வோடபோன் ஐடியா மார்ச் காலாண்டிற்கான இழப்புகள் ரூ.7,166.1 கோடியாகக் குறைந்துள்ளதாகவும், அதன் வாரியம் ரூ.20,000 கோடி வரை நிதி திரட்ட ஒப்புதல் அளித்ததாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக பட்டியலிடப்பட்ட ஸ்கோடா டியூப்ஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Coolie | GVPrakash | CinemaUpdates

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

SCROLL FOR NEXT