கோப்புப் படம் 
வணிகம்

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

DIN

பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,571.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.43 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 380.42 புள்ளிகள் குறைந்து 82,134.72 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 103.10 புள்ளிகள் குறைந்து 25,038.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பட்டியலில், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.

இன்போசிஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஆசிய சந்தைகளில் ஹாங்காங், பாங்காக், ஜகார்த்தா, ஜப்பான் பங்குச்சந்தைகள் சரிவிலும் அதேநேரத்தில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தை ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று லேசான சரிவுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

SCROLL FOR NEXT