பங்குச் சந்தை 
வணிகம்

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்...

DIN

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதலின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் இன்று காலை தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்தகமாகி வருகின்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 258 புள்ளிகள் குறைந்து 24,629.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

உலோகம், எண்ணெய் & எரிவாயு, மருத்துவம், ஆட்டோ, பொதுத்துறை வங்கி, ஐடி உள்ளிட்ட அனைத்து துறைகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, ஓஎன்ஜிசி மட்டுமே லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT