கோப்புப் படம் 
வணிகம்

முதல் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடியாக சரிவு!

கடந்த வாரம் டாப் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் 8 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு ரூ.1,65,501.49 கோடியாக சரிந்த நிலையில், எச்.டி.எஃப்.சி வங்கியானது மிகப்பெரிய சரிவை பதிவு செய்தது.

DIN

புதுதில்லி: கடந்த வாரம் டாப் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் 8 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீடு ரூ.1,65,501.49 கோடியாக சரிந்தன.

கடந்த வாரம், பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 1,070.39 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை தங்கள் சந்தை மதிப்பீடுகள் உயர்ந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய ஆயுள் காப்பீட்டு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனில்வர் லிமிடெட் ஆகியவற்றின் சந்தை மதிப்பீடுகள் சரிவைக் கண்டன.

எச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பீடு ரூ.47,075.97 கோடி சரிந்து ரூ.14,68,777.88 கோடியாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.30,677.44 கோடி சரிந்து ரூ.10,10,375.63 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பீடு ரூ.21,516.63 கோடி சரிந்து ரூ.19,31,963.46 கோடியாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ.18,250.85 கோடி சரிந்து ரூ.7,07,186.89 கோடியாகவும், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ரூ.16,388.4 கோடி சரிந்து ரூ.5,44,893.71 கோடியாகவும், பாரதி ஏர்டெல் சந்தை மதிப்பீடு ரூ.15,481.22 கோடி குறைந்து ரூ.10,50,413.33 கோடியாகவும், எல்.ஐ.சி வங்கி சந்தை மதிப்பீடு ரூ.13,693.62 கோடி குறைந்து ரூ.5,93,379.66 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸ் ரூ.2,417.36 கோடி குறைந்து ரூ.5,80,052.09 கோடியாக இருந்தது.

இருப்பினும் டி.சி.எஸ் சந்தை மதிப்பீடு ரூ.22,215.06 கோடி உயர்ந்து ரூ.12,47,190.95 கோடியாகவும், இன்போசிஸின் சந்தை மதிப்பு ரூ.15,578.3 கோடி உயர்ந்து ரூ.6,65,318.03 கோடியாகவும் இருந்தது.

முதல் 10 நிறுவன பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகவும் அதனைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி வங்கி, டி.சி.எஸ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இன்போசிஸ், எல்.ஐ.சி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகியவை உள்ளன.

இதையும் படிக்க: பதட்டங்களுக்கு நடுவில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்த கொல்கத்தா போர்ட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT