பங்குச் சந்தை 
வணிகம்

சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்தது! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள் கிழமை) பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,034.45 என்ற புள்ளிகளில் தொடங்கி நிலையில் காலை 11.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 559.20 புள்ளிகள் உயர்ந்து 81,677.80
புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 81,781.89 புள்ளிகள் வரை சென்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 182.25 புள்ளிகள் உயர்ந்து 24,900.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில் ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், சிப்லா, ஸ்ரீராம் பைனான்ஸ், பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், எஸ்பிஐ, ஜியோ, அதானி என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. நிஃப்டி ஐடி பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்காய், சீனாவின் ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இந்தோனேசியா, சிங்கப்பூர் சந்தைகளில் தற்போது சரிவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றுமுதல் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

தாதகாப்பட்டியில் சுற்றித்திரிந்த 3 வயது சிறுவன் மீட்பு

தனியாா் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

பூ விற்பனை செய்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி தாக்குதல்

17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

SCROLL FOR NEXT