இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த மூன்று நாள்களாக சரிவுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று, வர்த்தகம் தொடங்கியது முதல் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றது.
காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 691.69 புள்ளிகள் அதிகரித்து 82,053.56 ஆகவும், நிஃப்டி 210.90 புள்ளிகள் அதிகரித்து 25,004.15 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.
சென்செக்ஸை பொருத்தவரை அதிகபட்சமாக எம்&எம் பங்குகள் 2.50 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. ஹீரோ மோட்டர்கார்ப் 2.21 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.
அதேபோல், நிஃப்டியில் அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 2 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.