ரூபாய் மதிப்பு PTI
வணிகம்

ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 3) 3 காசுகள் உயர்ந்து ரூ. 87.34 காசுகளாக நிறைவு பெற்றது.

கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (பிப். 28) 19 காசுகள் சரிந்து ரூ. 87.37 காசுகளாக இருந்தது. அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று அதிகபட்சமாக ரூ. 87.41 காசுகள் வரை சரிந்தது.

எனினும் பிற்பாதியில் சற்று நேர்மறையாக இருந்தது. அதிகபட்சமாக ரூ. 87.25 காசுகள் வரை மதிப்பு உயர்ந்திருந்தது.

எனினும் வணிக நேர முடிவில் முந்தைய நாளின் ரூபாய் மதிப்பில் இருந்து 3 காசுகள் சரிந்து ரூ. 87.34 காசுகளாக வணிகம் நிறைவு பெற்றது.

ரூபாய் மதிப்பு

இன்றைய பங்குச் சந்தை வணிகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதும், வெளிநாட்டு நிதி வெளியேற்றமும் நிலையற்று இருந்ததும் முதலீட்டாளர்களிடையே உற்சாகமான போக்கை இன்று ஏற்படுத்தியது. இதுவே ரூபாய் மதிப்பு சற்று உயர்வதற்கான காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.16 புள்ளிகள் சரிந்து 73,085.94 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.40 புள்ளிகள் சரிந்து 22,119.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.024 சதவீதம் சரிவாகும்.

மெட்டல், ரியாலிட்டி, நுகர்வோர் பொருள்கள் துறை, ஐடி துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்த நிலையில், மீடியா, வங்கித் துறை, எண்ணெய் & எரிவாயு துறை பங்குகள் எதிர்மறையாக இருந்தன.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT