முகப்பு
வணிகம்

வாகனங்களின் விலையை உயா்த்தும் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது.

Updated On : 26 மார்ச் 2025, 2:01 am IST
பகிர்:

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நிறுவன ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனங்கள் (எஸ்யுவி) மற்றும் வா்த்தக வாகனங்களின் விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவன வாகனங்களின் விலை 3 சதவீதம் வரை அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு எஸ்யுவி மற்றும் வா்த்தக வாகன ரகத்துக்கும் ஏற்ற வகையில் விலை உயா்வு மாறுபடும்.

அதிகரித்துள்ள உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயா்வு அமல்படுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments