நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!
தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்பாக்கத்தில் தனது புதிய கிளையை நிறுவியுள்ளது.
2024-25 நிதியாண்டில், வங்கியானது நாடு முழுவதும் 46 புதிய கிளைகளைத் நிறுவியுள்ளதாக தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த கிளைகளில் அடிப்படை வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையில், நிறுவன மற்றும் நுகர்வோர் கடன் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்றது வங்கி.
இந்தியா முழுவதும் கரூர் வைஸ்யா வங்கி 2,200 க்கும் மேற்பட்ட ஏடிஎம் நெட்வொர்க்குகள் உள்ளன.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,81,993 கோடியாக உள்ள நிலையில், வைப்புத் தொகையானது ரூ.99,155 கோடியாகவும், முன்பணம் ரூ.82,838 கோடி ஆகவும் உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 4% வளா்ச்சி கண்ட சில்லறை விற்பனை துறை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.