முகப்பு
வணிகம்

அதீத பேட்டரி திறனுடன் வெளியானது ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போன்!

7000mAh பேட்டரி திறனுடன் 120W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 50% பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் அடையலாம்.

Updated On : 26 மே 2025, 5:59 pm IST
ஐகியூ நியோ 10 - படம் / நன்றி -
பகிர்:

ஐகியூ நியோ வரிசையில் அதீத பேட்டரி திறனுடன் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகமாகியுள்ளது.

பலரும் எதிர்பார்த்திருந்த ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்திய சந்தைகளில் கிடைக்கும் என ஐகியூ நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐகியூ நிறுவனம் இந்திய சந்தைகளில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. சீனாவின் விவோ நிறுவனம் செயல்பட்டுவரும் குவாங்டாங் மாகாணத்திலேயே ஐகியூ நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த இரு நிறுவனங்களுமே இந்தியாவில் நடுத்தரக் குடும்பத்தின் ஸ்மார்ட்போன் கனவுகளை பூர்த்தி செய்து வரும் நிலையில், ஐகியூ நிறுவனம் அதிக பேட்டரி திறனுடன் நியோ 10 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சலுகைகள் என்னென்ன?

ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போனானது நான்கு வகையான நினைவக அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB மற்றும் 16GB+512GB.

இதில், 8GB உள்நினைவகமும் 128GB நினைவகமும் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 31,999க்கும், 8GB+256GB ஸ்மார்ட்போன் ரூ. 33,999க்கும், 12GB+256GB ஸ்மார்ட்போன் ரூ. 35,999க்கும் கிடைக்கிறது. இதேபோன்று 16GB+512GB நினைவக திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 38,999க்கு விற்கப்படுகிறது.

ஏற்கெனவே ஐகியூ அல்லது விவோ ஸ்மார்ட்போன் வைத்திருந்து அதனை மாற்றி இந்த புதிய ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ. 4,000 தள்ளுபடி பெறலாம்.

ஐகியூ, விவோ தவிர மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாற்றினால் ரூ. 2,000 தள்ளுபடி பெறலாம்.

இன்று பிற்பகல் 1 மணி முதல் ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஐகியூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலோ அல்லது அமேசான் விற்பனை தளத்திலோ முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தற்போது முன்பதிவு செய்பவர்களுக்கு ஜுன் 2 - 3 ஆம் தேதிகளில் பிற்பகல் 12 மணியளவில் டெலிவரி செய்யப்படும் என இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போனானது குவால்கம் ஸ்நாப்டிராகன் 8எஸ் 4ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

கேம் பிரியர்களைக் கவரும் வகையில் கியூ ஒன் சிப்செட்டும், 144FPS கேமிங் திரை அனுபவத்தையும் தரக்கூடியது.

பிரகாசமான அமோலிட் திரையும், பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 144Hz திறன் கொண்டது. 5,000 nits அளவில் மிக அதீத பிரகாசத்தை இத்திரை வழங்கும்.

பின்புற கேமராவில் 50MB லென்ஸ் உடன் சோனி நிறுவனத்தின் IMX882 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 32MB செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

மிகுந்த சிறப்பம்சமாக, 7000mAh பேட்டரி திறனுடன் 120W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 50% பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் அடையலாம்.

இதையும் படிக்க | ரூ.32,000 தள்ளுபடி விலையுடன் சாம்சங் கேலக்ஸி ஸீ ஃபோல்ட் 6!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.