7,000mAh பேட்டரி உடன் அறிமுகமான ஓப்போ ஏ6சி!
7,000mAh பேட்டரி திறன், 120Hz தொடுதிரை, இரட்டை கேமரா, அதீத நினைவகம் போன்றவை இதன் சிறப்புகள்...
ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஏ6சி இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகமானது.
7,000mAh பேட்டரி திறன், 120Hz தொடுதிரை, இரட்டை கேமரா, அதீத நினைவகம் போன்றவை இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
அந்தவகையில் தற்போது ஓப்போ ஏ6சி அறிமுகமாகியுள்ளது. வெள்ளை மற்றும் பழுப்பு என இரு வகையான நிறங்களில் கிடைக்கின்றன.
4GB உள்நினைவகம் (RAM) + 64GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 13,999.
4GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 16,999.
ஓப்போ ஏ6சி சிறப்பம்சங்கள்
ஓப்போ ஏ6சி ஸ்மார்ட்போன் 6.75 அங்குல திரை உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 240Hz தொடு உணர் பரிசோதனை விகிதம் உடையதால், கேம் விளையாடும்போது கூட திரையின் சுமூகத்தன்மையை உணர முடியும்.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 900 nits திறன் உடையது.
ஆக்டா கோர் யுனிஸ்கோ T7250 சிப்செட் கொண்டது.
புகைப்படப் பிரியர்களுக்காக பின்புறம் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பாக 7,000mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 15W திறனுடைய சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி இணைய சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் எடை 215 கிராம் மட்டுமே.
Oppo A6c smart phone launched in India with 7,000mAh battery and 120Hz display
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.