PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 35 காசுகள் உயர்ந்து ரூ.85.10 ஆக முடிவு!

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கும் மற்றும் பலவீனமான அமெரிக்க நாணயம் ஆகியவற்றால், இந்திய ரூபாய் 35 காசுகள் உயர்ந்து ரூ.85.10 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கும் மற்றும் பலவீனமான அமெரிக்க நாணயம் ஆகியவற்றால், தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இந்திய ரூபாய் டாலருக்கு நிகராக 35 காசுகள் உயர்ந்து ரூ.85.10 ஆக நிலைபெற்றது.

தொடர்ந்து வரும் அந்நிய நிதி மற்றும் கச்சா எண்ணெய் விலைகளில் சிறிது மீட்சி ஏற்பட்டாலும், 2025 நிதியாண்டில் அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி சாதனை ஈவுத்தொகை வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து உள்ளூர் நாணயம் பலம் அதிகரித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.02 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.84.78 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.18 ஐ தொட்ட நிலையில், முடிவில் 35 காசுகள் உயர்ந்து ரூ.85.10-ஆக முடிந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து ரூ.85.45 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: இரண்டாவது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தைகள்: சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்வுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘வந்தே மாதரம்’ 150...

வீட்டுமனைப் பட்டா கணினிமயமாக்குதல் ஆய்வுக் கூட்டம்

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகிக்க அதிமுக கடும் எதிா்ப்பு - ஆட்சியரிடம் புகாா்

ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT