பங்குச் சந்தைகள் 
வணிகம்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

நாளை குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுவதால் பங்குச் சந்தைகள் செயல்படுமா என்பது பற்றி

இணையதளச் செய்திப் பிரிவு

நாளை நாடு முழுவதும் குருநானக் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதால், பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5ஆம் தேதி தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பைப் பங்குச் சந்தை இரண்டும், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடையும். வார இறுதி நாள்களில் இயங்காது. அது மட்டுமல்லாமல், அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள்களிலும் இயங்காது.

பங்குச் சந்தைகளுக்கான காலண்டரில், குருநானக் ஜெயந்தி, விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இன்று மாலை பங்குச் சந்தை நிறைவு பெற்றால், அதன்பிறகு வியாழக்கிழமை காலைதான் பங்குச் சந்தைகள் தொடங்கும். இந்த ஆண்டில், நாளை ஒரு விடுமுறை. அடுத்து டிசம்பர் மாதம் 25ஆம் தேதிதான், பங்குச் சந்தை காலாண்டர்படி, கடைசி விடுமுறை நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT