பங்குச் சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
83,671.52 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 275.20 புள்ளிகள் குறைந்து 83,260.16 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.65 புள்ளிகள் குறைந்து 25,492.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறை ரீதியாக, தொலைத்தொடர்பு குறியீடு 1% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பொதுத்துறை வங்கி, எண்ணெய் & எரிவாயு, உலோகம், ரியல் எஸ்டேட் 0.5 முதல் 1.5% வரை சரிந்துள்ளது.
பாரதி ஏர்டெல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், டிரென்ட்,ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபத்தைப் பெற்றன.
அதேநேரத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஓஎன்ஜிசி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன,
சென்செக்ஸ் மிட்கேப் குறியீடு 0.6%, ஸ்மால்கேப் குறியீடு 0.3% சரிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.