மும்பை: புதுதில்லி முதல் ஷாங்காய் இடையேயான இடைவிடாத விமானங்களை பிப்ரவரி 1, 2026 முதல் மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா இன்று அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் சீனாவுக்கு விமான சேவையை இயக்க உள்ளது.
ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு பிறகு 2026ல் மும்பை முதல் ஷாங்காய் இடையே இடைவிடாத விமான சேவையை அறிமுகப்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
வேறு எந்த விமான நிறுவனத்தையும் விட சர்வதேச அளவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏர் இந்தியா குழுமத்தின் 48வது சர்வதேச இடமாக ஷாங்காய் உள்ளது.
ஏர் இந்தியா புதுதில்லி மற்றும் ஷாங்காய் இடையே வாரத்திற்கு நான்கு முறை அதன் போயிங் 787-8 விமானத்தைப் இயக்கும். இதில் 18 படுக்கைகள் மற்றும் 238 விசாலமான இருக்கைகள் உள்ளன.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.88.63 ஆக நிறைவு!
Air India on Monday announced the resumption of its non-stop flights between Delhi and Shanghai, effective 1 February 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.