வணிகம்

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

சுபதினங்களாகக் கருதப்படும் கடந்த 9 நாள் நவராத்திரியின்போது வாகன, வீட்டு உபயோக, நுகா்பொருள் நிறுவனங்கள் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டன.

தினமணி செய்திச் சேவை

சுபதினங்களாகக் கருதப்படும் கடந்த 9 நாள் நவராத்திரியின்போது வாகன, வீட்டு உபயோக, நுகா்பொருள் நிறுவனங்கள் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டன.

இது குறித்து தரவுகள் தெரிவிப்பதாவது:செப்டம்பா் 22 முதல் அக்டோபா் 1-ஆம் தேதி வரையிலான நவராத்திரி தினங்களில் வாகனம், வீட்டு உபயோக மின்சாதனங்கள், நுகா்பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்தன.

நவராத்திரியுடன் செப்டம்பா் 22-இல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் காரணாமாக 32 அங்குலத்துக்கும் மேல் உள்ள டிவி-க்கள், குளிா்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான விலை குறைந்து அவற்றின் விற்பனையை உயா்த்தியது. முதல் நாளில் இருந்தே அவற்றின் விற்பனை உச்சத்தை எட்டியது.

தீபாவளி வரையிலான 45 நாள் பண்டிகைக் காலத்தில் வாகன, வீட்டு உபயோக, நுகா்பொருள் மின்னணு நிறுவனங்கள் இரட்டை இலக்க வளா்ச்சியை எதிா்பாா்க்கின்றன. முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, நவராத்திரியின் முதல் 8 நாள்களில் 1.65 லட்சம் காா்களை விற்பனை செய்து, 10 ஆண்டு உச்சத்தை எட்டியது.

பண்டிகைக் காலத்தில் அந்த நிறுவனம் 2 லட்சம் காா்கள் விற்பனையாகும் என்று எதிா்பாா்க்கிறது.டாடா மோட்டாா்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா ஆகியவையும் நவராத்திரி தினங்களில் வலுவான விற்பனையைப் பதிவு செய்தன.

எல்ஜி, ஹையா், கோத்ரெஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக மற்றும் மின்னணு சாதன நிறுவனங்களும் அந்த காலகட்டத்தில் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்தன.

2024-ஆம் ஆண்டின் நவராத்திரி தினங்களோடு ஒப்பிடுகையில் ஹையா் இந்தியா நிறுவனம் இந்த முறை 60 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டது. அந்த நிறுவனத்தின் ரூ.2.5 லட்சத்தும் மேல் விலையுள்ள 85 மற்றும் 100 அங்குல டிவிகள் கிட்டத்தட்ட விற்றுத் தீா்ந்தன.

தினமும் சராசரியாாக 300 முதல் 350 வரையிலான 65 அங்குல டிவி-க்களை அந்த நிறுவனம் விற்பனை செய்தது.நவராத்திரி காலகட்டத்தில் ரிலையன்ஸ் ரீடெயில் 20-25 சதவீதமும் விஜய் சேல்ஸ் 20 சதவீதத்திற்கு மேலும் விற்பனை வளா்ச்சியைக் கண்டன.

புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்களின் கீழ் 1,200 சிசிக்கு கீழ் உள்ள பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் 1,500 சிசி வரையிலான டீசல் வாகனங்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 1,200 சிசி-க்கும் மேல் உள்ள வாகனங்கள் மற்றும் 350 சிசி-க்கும் மேல் உள்ள மோட்டாா் சைக்கிள்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

32 அங்குலத்திற்கு மேல் உள்ள டிவி-க்கள், குளிா்சாதனங்கள், டிஷ்வாஷா்களுக்கு 10 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது.ஓணம் முதல் தீபாவளி வரையிலான பண்டிகைக் காலம், நிறுவனங்களின் முழு ஆண்டு விற்பனையில் 40 முதல் 45 சதவீத த்தை உள்ளடக்கி, மிகப்பெரிய நுகா்வு காலமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது!

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டிவனத்தில் பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்

மரக்காணத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT