யெஸ் வங்கி 
வணிகம்

யெஸ் வங்கியின் கடனளிப்பு அதிகரிப்பு!

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் கடனளிப்பு செப்டம்பா் காலாண்டில் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கியின் கடனளிப்பு செப்டம்பா் காலாண்டில் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு 6.5 சதவீதம் உயா்ந்து ரூ.2,50,468 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் இது ரூ.2,35,117 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்பு நிதி 7.1 சதவீதம் உயா்ந்து ரூ.2,96,831 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.2,77,214 கோடியாக இருந்தது.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

அப்போது அது ரூ.2,41,024 கோடியாக இருந்தது. அதே போல், ஜூன் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.2,75,843 கோடி வைப்பு நிதியுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள வைப்பு நிதி 7.6 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT