வணிகம்

ஸ்மார்ட்போன்களுக்கு இனி புதிய ஓஎஸ்! அறிமுகம் செய்தது ஓப்போ!

ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளத்தை (ஒ.எஸ்.) ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளத்தை (ஒ.எஸ்.) ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கலர் ஓஎஸ் 16 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓஎஸ்ஸில் பயனர்களின் சுமூக பயன்பாட்டிற்கு ஏதுவாக செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு சாதனங்களை தயாரித்து வருகிறது. தற்போது கலர் ஓஎஸ் 16 என்ற இயங்குதளத்தையும் தயாரித்துள்ளது. இந்த இயங்குதளம் விரைவில் இந்தியா உள்பட சர்வதேச அரங்கில் அறிமுகமாகவுள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆக்ஸிஜன் ஓஎஸ் 16 என்ற பெயரில் ஆன்டிராய்டு 16 பெறுகின்றன. ஓப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு கலர் ஓஎஸ் 16 மட்டுமே உள்ளது.

கணினி வளங்களை திறமையாக நிர்வகிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட டிரினிடி எஞ்ஜின் உள்ளது. மேலும் வண்ணங்களிலும், எழுத்துருக்களிலும் புதிய வகைகளைக் கொண்டதாக இருக்கும்.

மற்ற இயங்குதளங்களைக் காட்டிலும் புதிய வண்ணங்களைக் கொடுக்கும் வகையில் ஒலி மொழியைக் கொண்டிருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.

அக்டோபர் தொடங்கியதிலிருந்தே ஓப்போ நிறுவனம் கடந்த சில நாள்களாக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 8 மற்றும் ஓப்போ ஃபைன்ட் என்5 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்த புதிய இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என ஓப்போ குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | டிவிஎஸ் ரைடர் 125: டூயல் டிஸ்க் பிரேக் வேரியண்ட் அறிமுகம்!

OPPO ColorOS 16 Launched Officially

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

SCROLL FOR NEXT