கோப்புப் படம் 
வணிகம்

ஆசிய பங்குகள் உயர்வு எதிரொலி: எழுச்சியில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 575.45 புள்ளிகள் உயர்ந்து 82,605.43 ஆகவும், நிஃப்டி 178.05 புள்ளிகள் உயர்ந்து 25,323.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்த மாத இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், உலகளாவிய சந்தைகளில் இருந்து வந்த நேர்மறையான குறிப்புகளும், அதன் அடிப்படையில் ஏற்பட்ட உத்வேகத்தால் முதலீட்டாளர்கள் வங்கி மற்றும் நிதிப் பங்குகளை வாங்கியதன் காரணமாக, பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 575.45 புள்ளிகளும், நிஃப்டி 178.05 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 697.04 புள்ளிகள் உயர்ந்து 82,727.02 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 575.45 புள்ளிகள் உயர்ந்து 82,605.43 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 178.05 புள்ளிகள் உயர்ந்து 25,323.55 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிலையில், ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, ட்ரெண்ட், அல்ட்ராடெக் சிமென்ட், எடர்னல் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன. இருப்பினும் டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிந்து முடிந்தன.

பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டிரென்ட், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி-யில் உயர்ந்தும் அதே வேளையில் இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரந்து முடிவடைந்தன.

அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்த நிலையில், ரியாலிட்டி குறியீடு 3 சதவிகிதம் வரை உயர்ந்தது. மின்சாரம், நுகர்வோர் சாதனங்கள், பொதுத்துறை வங்கி, உலோகம் மற்றும் தொலைத்தொடர்பு குறியீடுகள் 1-2 சதவிகிதம் வரை உயர்ந்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், இரண்டாவது காலாண்டு லாபம் உயர்ந்தததால், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் பங்குகள் 7 சதவிகிதம் வரை அதிகரித்தது. கீஸ்டோன் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பங்குகளை விற்பனை செய்ததால் அதன் பங்குகள் 8% வரை சரிந்தன. 2-வது காலாண்டு வருவாய் சரிந்ததால், சையண்ட் டிஎல்எம் பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தன.

ஐசிஐசிஐ லோம்பார்ட் பங்குகள் 2-வது காலாண்டு லாபத்தை அடுத்து 8% வரை உயர்ந்தன. பெங்களூரு அருகே கோத்ரேஜ் பிராபர்டீஸ் நிலத்தை வாங்கியதால் அதன் பங்குகள் 3.5% வரை உயர்ந்தன. வாரண்டுகள் மூலம் ரூ.1,000 கோடி நிதி திரட்டியதில் வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் பங்குகள் 6 சதவிகிதம் வரை உயர்ந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 62.28 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,508.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,661.13 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

மகாராஷ்டிர வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி பைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட், கனரா வங்கி, ஆர்.பி.எல் வங்கி, எடர்னல், எம்.சி.எக்ஸ் இந்தியா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

இதையும் படிக்க: ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.4,235 கோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள்: கல்வித் துறை ஆலோசனை

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை: மணப்பாறையில் மழையின் காரணமாக ஆட்டு சந்தை விற்பனை சரிவு

பேருந்து சக்கரத்தில் சிக்கி செவிலியா் உயிரிழப்பு

சேமிப்புக் கிடங்கு முன் காத்திருப்பு போராட்டம்

SCROLL FOR NEXT