மும்பை: உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியானது உள்ளூர் சந்தைகளின் நம்பிக்கையை அதிகரித்தது மற்றும் தொடர்ந்து வரும் அந்நிய நிதி காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 4-வது நாளாக தனது வெற்றிப் பயணத்தை மேற்கொண்டன.
இன்றயை காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 704.37 புள்ளிகள் உயர்ந்து 84,656.56 புள்ளிகளாக இருந்தது. வர்த்த முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 411.18 புள்ளிகள் உயர்ந்து 84,363.37 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 133.30 புள்ளிகள் உயர்ந்து 25,843.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 9.6 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்ததை அடுத்து, சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.52 சதவிகிதம் உயர்ந்தது.
சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, எடர்னல், அதானி போர்ட்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) அன்று உயர்ந்து முடிவடைந்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு நிகர லாபம் உயர்ததையடுத்து, முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை தொடர்ந்து வாங்கியதால் நிஃப்டி-50 குறியீடு இன்று வெகுவாக உயர்ந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ.308.98 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,526.61 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்யுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.29 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 61.11 அமெரிக்க டாலராக உள்ளது.
கடந்த வாரம், பிஎஸ்இ குறியீடு 1,451.37 புள்ளிகள் உயர்ந்ததும், நிஃப்டி 424.5 புள்ளிகள் உயர்ந்தது.
தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வழக்கமான சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தை முன்னிட்டு வர்த்தகம் மதியம் 1:45 மணி முதல் 2:45 மணி வரை நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.