கோப்புப்படம் 
வணிகம்

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,297.39 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 567.05 புள்ளிகள் அதிகரித்து 84,778.93 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 169.70 புள்ளிகள் உயர்ந்து 25,964.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் துறைகள் அதிக லாபமடைந்து வருகின்றன. அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடு தலா 0.5% உயர்ந்துள்ளன.

கோஃபோர்ஜ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இக்ளெர்க்ஸ் சர்வீசஸ், எச்டிஎஃப்சி வங்கி, பிரீமியர் எனர்ஜிஸ் ஆகியவை நிஃப்டியில் லாபமடைந்து வருகின்றன.

சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் பிவி, எஸ்பிஐ, எச்சிஎல்டெக் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதேநேரத்தில் இன்ஃபோசிஸ், கோடக் வங்கி, பிஇஎல், சன் பார்மா, பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு

தொழில்நுட்ப ஜவுளி இயக்க விழிப்புணா்வுக் கூட்டம்

வெண்ணைமலை கோயில் நில விவகாரம் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT