வயர்லெஸ் பவர் பேங்க்  படம் / நன்றி - போட்
வணிகம்

வயர்லெஸ் பவர் பேங்க்! போட் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

வயர் இணைப்பு இல்லாமல் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் வகையில் புதிய பவர் பேங்க் அறிமுகம்.

இணையதளச் செய்திப் பிரிவு

வயர் இணைப்பு இல்லாமல் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் வகையில் புதிய பவர் பேங்கை போட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எனர்ஜிஷ்ரூம் பிபி331 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பவர் பேங்க், 10000 mAh திறன் கொண்டது. ஸ்மார்ட்போன்களுக்கு 22.5W அளவில் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போட் நிறுவனம், மின்னணுப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது எனர்ஜிஷ்ரூம் பிபி331 என்ற வயலெஸ் பவர் பேங்கை தயாரித்துள்ளது.

யுஎஸ்பி போர்ட் மற்றும் டைப்-சி கேபிள்களை இணைத்துக்கொள்ளலாம். பவர் பேங்கில் சார்ஜ் இருக்கும் அளவுகள் விளக்குகளின் மூலம் பயனர்களுக்கு சுட்டிக்காட்டப்படும்.

கையடக்க வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனம், வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்தாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் 12 அடுக்கு ஐசி புரொடக்‌ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,599.

இதையும் படிக்க | சாம்சங்கில் முதல்முறை ஓஐஎஸ் கேமரா! கேலக்ஸி எம் 17 அறிமுகம்!

boAt New 15W Wireless power bank EnergyShroom PB331

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சித்தேரியில் வளா்ப்புக்காக 82,000 மீன் குஞ்சுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் நடவடிக்கை

ரூ.27 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் சுங்கத்துறை முன்னாள் அதிகாரி கைது

பிரதமா் மோடிக்கு குஜராத் தொழில் வளா்ச்சியில் மட்டும் ஆா்வம் -தேஜஸ்வி யாதவ் விமா்சனம்

வெங்காடு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவப் பணியாளா் கைது

SCROLL FOR NEXT