நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 395.05 புள்ளிகள் அதிகரித்து 80,962.76 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.40 புள்ளிகள் உயர்ந்து 24,821.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று(செப். 3 ) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக இருந்த 12 சதவீதம், 28 சதவீதம் வரிகளை ரத்து செய்து 5%, 18% வரி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரியில் மாற்றம் பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறைகளில், நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.3 சதவீதம் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு (1.7 சதவீதம்), ரியாலிட்டி (1.3 சதவீதம்), நிதி சேவைகள் (1 சதவீதம்) உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
எம் & எம், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ட்ரெண்ட், பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
டாடா நுகர்வோர் தயாரிப்பு, ஓஎன்ஜிசி, இண்டஸ்இண்ட் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.