கோப்புப் படம் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.88.12 ஆக முடிவடைந்ததது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.88.12 ஆக முடிவடைந்ததது.

இந்தியா மீதான அமெரிக்க வரிகள் மற்றும் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கவலைகளால் ரூபாயின் மதிப்பு வெகுவான அழுத்தத்தில் உள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றங்களும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.98 ஆக தொடங்கி ரூ.88.19 என்ற இன்ட்ராடே குறைந்த அளவை எட்டிய நிலையில், முந்தைய முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக முடிவடைந்தது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக கட்டணப் பிரச்சனை ரூபாயின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கக்கூடும் என்பதால், ரூபாயின் மதிப்பு எதிர்மறையான சார்புடன் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் மிரே அசெட் ஷேர்கானின் ஆராய்ச்சி ஆய்வாளர் அனுஜ் செளத்ரி.

இதையும் படிக்க: ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் ஒருநாள்: சதம் விளாசிய சல்மான் அகா; இலங்கைக்கு 300 ரன்கள் இலக்கு!

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெருவெற்றி? பிகார் வாக்குப்பதிவு கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தாத ஆர்ச்சர்..! ஆஷஸ் தொடரில் நிறைவேற்றுவாரா?

தில்லி கார் வெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ நிலையம் நாளையும் செயல்படாது!

SCROLL FOR NEXT