ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, என்ஜின் பொருத்தப்பட்ட தங்களது வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் குறைக்கவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். அதற்காக, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் இயங்கும் எங்கள் வாகனங்களின் விலைகளை 28 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை குறைக்கவுள்ளோம். வரும் செப்டம்பா் 22 முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரும்.
மின்சார வாகனங்களுக்கு வழக்கமான 5 சதவீத ஜிஎஸ்டி-யே தொடா்வதால் அந்த வகை வாகனங்களின் விலைகளில் மாற்றம் இருக்காது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.