கோப்புப் படம் 
வணிகம்

தொடர்ந்து 4-வது நாளாக சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 386.47 புள்ளிகள் சரிந்து 81,715.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 112.60 புள்ளிகள் சரிந்து 25,056.90 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்தது. இதில் எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்து குறியீடும் சரிந்து முடிவடைந்தன.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 386.47 புள்ளிகள் சரிந்து 81,715.63 புள்ளிகளாகவும், நிஃப்டி 112.60 புள்ளிகள் சரிந்து 25,056.90 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு கிட்டத்தட்ட 0.9% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.5% சரிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 3,134 பங்குகள் வர்த்தகமான நிலையில் 992 பங்குகள் உயர்ந்தும் 2,053 பங்குகள் சரிந்தும் 89 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.

சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சிஸ் வங்கி, டைட்டன் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை சரிந்த நிலையில் டிரெண்ட், என்டிபிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உயர்ந்து முடிவடைந்தன.

பலவீனமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளும், பலவீனமான தொடக்கத்திற்கு வித்திட்ட நிலையில், முடிவில் பங்குச் சந்தை சரிந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஜியோ ஃபைனான்சியல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை சரிந்த நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், நெஸ்லே, என்டிபிசி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், பவர் கிரிட் உள்ளிட்டவை உயர்ந்தன.

எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் அதாவது ஆட்டோ, ஐடி, மீடியா, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் ஆகியவை 0.5 முதல் 2% சரிவுடன் முடிவடைந்தன.

மார்ஃபி ரிச்சர்ட் பிராண்டை கையகப்படுத்தியதன் மூலம் பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் பங்குகள் உயர்தன. விரைவு வர்த்தகப் பிரிவான இன்ஸ்டாமார்ட் மறுசீரமைப்பும், ராபிடோவில் உள்ள பகுதி பங்குகளை விற்றதாலும் ஸ்விக்கி நிறுவன பங்குகள் 2% சரிந்தன. ரூ.475 கோடி ஆர்டரை கையகப்படுத்திய நிலையில் ரெஃபெக்ஸ் பவர் பங்குகள் 2% உயர்ந்தன.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப், இந்தியன் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், கனரா வங்கி, ஆதார் ஹவுசிங், மாருதி சுசுகி, ஆம்பர் எண்டர்பிரைசஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,551.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு சற்றே சரிந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.28 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $67.82 ஆக உள்ளது.

இதையும் படிக்க: ஹோண்டா 2 சக்​கர வாகன விற்​பனை மித​மா​கச் சரிவு

Benchmark indies extended the losing streak for a fourth session on September 24, as Nifty 50 slipped below 24,100 on all-round selling except FMCG.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? -ஓ. பன்னீர்செல்வம் பளிச் பதில்!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!

SCROLL FOR NEXT