முகப்பு
வணிகம்

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது பற்றி...

Updated On : 13 ஏப்ரல், 2026 at 9:33 AM
சித்தரிக்கப்பட்டது | இந்திய பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 9:17 AM

இந்திய பங்குச் சந்தை திங்கள்கிழமை காலை கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்விளைவாக திங்கள்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை காலை கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது. காலை 9. 20 நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,622 புள்ளிகள் சரிந்து, 75,928 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.

இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 புள்ளிகள் சரிந்து 23,589 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றது.

சென்செக்ஸின் சன் பார்மா, டைட்டான், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட அனைத்துப் பங்குகளும் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றது.

நிஃப்டியிலும் ஆட்டோ, ஐடி, வங்கி, ஸ்மால் கேப், மிட் கேப் என அனைத்து துறை பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

ஏற்றத்துக்கு பின் சரிவு!

கடந்த வாரம், ஈரானுடன் இரண்டு வாரம் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப் போவதாக டிரம்ப் அறிவித்ததை அடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 வாரங்களாகக் கண்டு வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் மேலான வாராந்திர உயா்வைப் பதிவு செய்தன.

கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 6 சதவீதம் வரை உயா்ந்து, வா்த்தகத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

summary

Indian Stock Market Plunges! Sensex Drops 1,600 Points!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.