முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிவு! ரூ. 8 லட்சம் கோடி இழப்பு!!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:17 PM
கோப்புப் படம் - PTI
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:38 PM

3 நாள்கள் உயர்வுக்குப் பிறகு பங்குச் சந்தை வர்த்தகம் இன்று(பிப். 19) கடும் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,969.82 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை சென்செக்ஸ் 300 புள்ளிகள் அளவில் சரிந்து வர்த்தகமானது.

எனினும் வர்த்தக நேர இறுதியில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,236.11 (1.48%) புள்ளிகள் சரிந்து 82,498.14 புள்ளிகளில் நிலை பெற்றது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் வரை சரிந்தது.

Advertisement

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:54 PM

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 365.00 (1.41%) புள்ளிகள் குறைந்து 25,454.35 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 பங்குகளும் சரிவில் முடிவடைந்தன. இண்டிகோ, எம்&எம், அன்ட்ராடெக் சிமென்ட், டிரென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.2 சதவீதம் வரை சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100, ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 1.59 சதவீதம், 1.27 சதவீதம் சரிந்து முடிந்தன.

துறைரீதியாக நிஃப்டி ரியல் எஸ்டேட், மீடியா, ஆட்டோ பங்குகள் தலா 2 சதவீதம் சரிந்து அதிக இழப்பை சந்தித்த துறைகளாக உள்ளன. தொடர்ந்து நிஃப்டி எஃப்எம்சிஜி, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. அனைத்துத் துறைகளும் இன்று சரிவுடன் முடிந்துள்ளன.

இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்று சுமார் ரூ. 8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:59 PM

பங்குச்சந்தை சரிவு, ஏன்?

வழக்கத்தைவிட அதிக வெளிநாட்டுப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க - ஈரான் நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க பெடரல் வட்டி விகிதக் குறைப்பின் மீதான நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 10,956 கோடி மதிப்புள்ள ஐடி பங்குகளை விற்றுள்ளனர். ஐடி துறையில் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் ஐடி பங்குகள் அதிகம் விற்பனையாகி கடுமையாகச் சரிந்துள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தைகளும் நேற்று(பிப். 18) சரிவுடன் முடிந்துள்ளன.

summary

Stock Market Close: Sensex cracks 1,236 points; Nifty ends at 25,454

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.