புதுதில்லி: குளோபஸ் ஸ்பிரிட்ஸ் லிமிடெட், டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.30.44 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு மதுபான பிராண்டுகளை விற்பனை செய்யும் குளோபஸ் ஸ்பிரிட்ஸ், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.41.12 லட்சம் வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்திருந்தது.
செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.882.96 கோடியுடன் ஒப்பிடுகையில் இது ரூ.938.36 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
மொத்த செலவுகள் கடந்த ஆண்டு ரூ.884.04 கோடியுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டில் இது ரூ.899.22 கோடியாக இருந்தது. இதனிடையில், நடப்பு காலாண்டில், உற்பத்திப் பிரிவில் கடந்த வருடம், இதே காலகட்டத்தில் ரூ.329.4 கோடியுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ.440.8 கோடியாக அதன் வருவாயைப் பதிவு செய்தது.
நுகர்வோர் பிரிவில், 'பிரஸ்டீஜ் மற்றும் அதற்கும் மேற்பட்ட' வகை பிராண்ட் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், அதன் வருவாய் ரூ.43.3 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.44.9 கோடியாக பதிவு செய்த நிலையில், நுகர்வோர் பிரிவில், 'ரெகுலர் மற்றும் பிற' வகையான பிராண்ட், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், அதன் வருவாய் ரூ.228.8 கோடியுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ.230.6 கோடியாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.