தொடர்ந்து 3 ஆவது நாளாக பங்குச் சந்தை வர்த்தகம் இன்று(வியாழக்கிழமை) உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,368.96 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 221.69 புள்ளிகள் உயர்ந்து 82,566.37 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.15 புள்ளிகள் உயர்ந்து 25,418.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வர்த்தக நேர தொடக்கத்தில் ஏற்ற, இறக்கத்தில் இருந்த நிலையிலும் பங்குச்சந்தைகள் நேர்மறையில் முடிவடைந்துள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் 2026 நிதியாண்டில் 4.4 சதவீத நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது என்றும் கூறியுள்ளது. இது பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில், டாடா ஸ்டீல், எல்&டி, ஆக்சிஸ் வங்கி, எடர்னல், என்டிபிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
அதேநேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டிகோ, மாருதி சுசுகி, டிசிஎஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் 100, ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 0.18 சதவீதம், 0.20 சதவீதம் உயர்வு பெற்றன.
நிஃப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து முடிந்தன. மாறாக, நிஃப்டி ஹெல்த்கேர் குறியீடு அதிக இழப்பைச் சந்தித்தது. தொடர்ந்து எஃப்எம்சிஜி, கெமிக்கல்ஸ், ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.