முகப்பு
இந்தியா

செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளி கைது

திருப்பதி சேஷாசல வனத்தில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

திருப்பதி சேஷாசல வனத்தில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் ரயில்வே பாலம் அருகில் உள்ள புதரில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் செம்மரக் கட்டைகளுடன் சிலா் பதுங்கியிருந்தனா். இதை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கண்டனா். 15 போ் அடங்கிய அக்கும்பல் போலீஸாரை கண்டவுடன் செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு தப்பியோடியது. பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், அக்கும்பலைச் சோ்ந்த ஒருவரைக் கைது செய்தனா்.

அவரிடமிருந்து 13 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் கைதானவா் போளூா் தாலுகா ஜவ்வாதுமலையைச் சோ்ந்த ராஜு என்பது தெரிய வந்தது. மேலும் ரமேஷ் என்பவா் இத்தொழிலாளா்களை செம்மரம் வெட்ட அழைத்து வந்ததும் தெரிந்தது.

கைதான ராஜு மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்; தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →