மரணமில்லாப் பெருவாழ்வு

26. ரத்த அழுத்தம்

மனிதரிடையே சர்க்கரை நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்று ரத்த அழுத்தமும் உடையவர்கள் சர்வ சாதாரணமாகி விட்டனர்.

டாக்டர் அப்பன்

மனிதரிடையே சர்க்கரை நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்று ரத்த அழுத்தமும் உடையவர்கள் சர்வ சாதாரணமாகி விட்டனர்.

உயர் ரத்த அழுத்தம், தாழ்ந்த ரத்த அழுத்தம் என இருவகையாகப் பிரித்துள்ளனர். உடல் பருமன் உடையவர்களிடம், அடிக்கடி கோபத்திற்கு உட்படுபவர்களிடம், இந்நோய் காணப்படுகிறது. எந்நோய்க்கும் பெரும்பாலும் ஆங்கில மருந்துகளை அணுக வேண்டாம். ஏனெனில் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தி, பல நோய்களுக்கு வித்திடுகின்றது. இப்பேருண்மையை நம்மிடையே உண்மையான, மனித நேயமிக்க ஆங்கில மருத்துவர்கள் பற்பல நாடுகளிலும் அன்று முதல் இன்று வரை உணர்த்தியுள்ளனர். எடுத்துக் காட்டாக, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், அவதரித்து, இமயமலையில் ரிஷிகேசத்தில், தெய்விக வாழ்க்கைச் சங்கம் நிறுவிய சிவானந்த சுவாமிகள் ஆங்கில மருத்துவம் பயின்றவர். ஆனால் அவர் ‘இயற்கை மருத்துவம்’ நூல் வெளியிட்டுள்ளார். யோகா மருத்துவத்தைப் பரப்பியுள்ளார். சென்னை திருவொற்றியூரில், ‘சரசுவதி சங்கம்’ நிறுவிய பிட்சு சுவாமிகள் ஆங்கில மருத்துவம் பயின்றவர். ஆனால் அவரும் களிமண் சுவாமி எனப் பெயர் பெற்று பல இயற்கை மருத்துவ நூல்கள் எழுதி, வெளி வந்துள்ளன.

பெங்களூரில், மருத்துவர்.ஹெக்டே, சென்னையில், மருத்துவர் பஸ்லுர் ரஹ்மான் இருவரும் ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்கள். நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். இவர்களும் ஆங்கில மருத்துவத்தை ஆதரிக்கவில்லை. டென்மார்க் நாட்டில் வாழ்ந்த, மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர். கிறிஸ்டின் நோல்பி என்பவரும் ஆங்கில மருத்துவம் பயின்றவன். ஆங்கில மருத்துவம் மூலம், அவரது மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்த இயலவில்லை. பின் பழங்களையே தனது உணவாக ஏற்று, தனது மார்பகப் புற்றுநோயை குணப்படுத்தியுள்ளார். இவர் டென்மார்க் நாட்டில் கும்ளி கார்டன் எனும் தீவில், பழ உணவு மருத்துவ நிலையம் நிறுவி பழ உணவு உண்பதன் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தியுள்ளார்.

எனவே ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்கள் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துவதை விரைவில், படிப்படியாக நிறுத்துவது நல்லது. இதன் மூலம் பக்க விளைவுகள், மற்றும் பிற நோய்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கலாம். மருந்துக்கான பணச் செலவும் இல்லை. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தமது உணவில் உப்பு, மிளகாய், மிளகாய் வற்றல், எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகள் ஆகியவற்றை நிறுத்தினாலே உயர் ரத்த அழுத்தம் குறைந்து சம நிலைக்கு வந்துவிடும். உப்பை பொன் நிறமாக லேசாக வறுத்தி படிப்படியாக உப்பின் அளவைக் குறைத்துக் கொண்டே வரலாம். மிளகாய், , மிளகாய் வற்றல் பயன்படுத்துவதையும் படிப்படியாக, விரைவில் குறைத்து வரலாம். அல்லது மிளகாய், மிளகாய் வற்றலுக்குப் பதிலாக நல் மிளகு கார சுவைக்கு சேர்க்கலாம். மேலும் அசைவ உணவுகளான பால், மற்றும் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், முட்டை, மீன், கருவாடு, இறைச்சி, கோழி மற்றும் பிற அசைவ உணவுகளை தவிர்த்தாலே, ரத்த அழுத்தம் சமமாகிவிடும்.

மேலும், சமைத்த உணவுகள் உண்ணும் பழக்கம் தான், அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம். எனவே, இரவு ஒருவேளை மட்டும் மனிதரது இயற்கை உணவாகிய தேங்காயும் பழ வகைகளும் உணவாக உண்டு, சமையல் உணவைத் தவிர்க்கலாம். காலை, மதியம், இருவேளைகளிலும் சமைத்த சைவ உணவு, உப்பு, காரம் மிக மிகக் குறைத்து சமைத்தது உண்டு வரலாம். சில நாட்கள் கழித்து, காலையும், இரவும் இரு வேளைகளிலும், தேவையான அளவு தேங்காயும், பழ வகைகளையும் உணவாக உண்டு, மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு, உப்பு, காரம் மிக மிகக் குறைத்து சமைத்தது உண்டு வந்தால், ரத்த அழுத்தம் நோயிலிருந்து மருந்து, மாத்திரையின்றி விடுபடலாம்.

பழங்களில் மற்றும் சமைக்காத பச்சை உணவில், தாது உப்பு இருப்பதால் குறைந்த ரத்த அழுத்தமும் சரியாகின்றது. நமக்கு வேண்டியது தாது உப்பு எனும் மினரல் சால்ட் தான். பிற உப்புக்களான சோடியம் குளோரைடு, மற்றும் இந்து உப்புக்கள் அல்ல.

மனிதரைத் தவிர, பிற எந்த உயிரினங்களான விலங்குகள், பறவைகள், மற்றும் ஊர்வன மற்றும் பிறிதொரு உயிரினங்கள் அனைத்தும் உப்பை உண்பதேயில்லை. அவைகள் அனைத்தும் தத்தமக்குரிய இயற்கை உணவுகளை மட்டும் கிடைத்தபொழுது உண்டு வாழ்கின்றன. அவற்றுக்கு ரத்த அழுத்தம் எனும் நோயே இல்லை.

எனவே பகுத்தறிவுள்ள நாமும், மருந்து, மருத்துவம், மருத்துவரை நாடுவதைத் தவிர்த்து நமக்குரிய இயற்கை உணவில் அதிகபட்சம் உண்டு வாழ்ந்து, அப்படி சாப்பிட இயலாத போது மட்டும் சமைத்த சைவ உணவு, உப்பு, காரம், எண்ணெய் ஆகியன மிக மிகக் குறைத்து சமைத்த சீர் திருந்திய சமையலுணவை உண்டு வாழ்வதன் மூலம் மருந்தின்றி, ரத்த அழுத்தம் நோயிலிருந்து சீக்கிரம் குணம் காணலாம். நமது சந்ததியினரையும் நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கலாம். ஆரோக்கிய மானிட சமுதாயத்தை உருவாக்கலாம். மானிட சேவை,உலக சேவைகளில் சிறிந்த சேவை. நோயற மனிதர்களை உருவாக்குவதுதான் செல்வத்தில் சிறந்த செல்வம்.நோயற்ற வாழ்வே நம்மை நாமே உணவில் மாற்றம் செய்து, நோயிலிருந்து குணமாவதையும், நோய்க்கு இடங்கொடாமல் வாழ்வதையும் ஏற்று செயல்படுவதில் எவ்வித இன்னலும் இல்லை. மாறாக உணவில் மாற்றம் செய்யாது, மருத்துவத்தை நம்பி, பணத்தை விரையம் செய்து, நமது உறுப்புக்களை இழந்து, பல கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்வது, எவ்வளவு துயர் நிரம்பிய வாழ்வு என்பதை சிறிது ஆழந்து சிந்திப்போம். பிற உயிரினங்களைப் போல், நாமும் குறைந்தபட்சம் ஓரளவாவது இயற்கை உணவு உண்டு, இயற்கையோடியைந்த வாழ்வு வாழ முடிவெடுப்போம். நோயை மறப்போம். மருத்துவத்தை மறப்போம். இயற்கையை ஏற்போம். இறையருள் பெறுவோம். இறை உலகை இயற்றுவோம்.

பின்குறிப்பு – காபி, டீ, பால் குளிர்பானங்கள், வெந்நீர் போன்ற அனைத்து செயற்கை பானங்களையும் தவிர்த்து, பச்சைத் தண்ணீர், இளநீர், தேங்காய் தண்ணீர், தேன் கலந்த பச்சைத் தண்ணீர், எலுமிச்சை, நெல்லி, திராட்சை, ஆரஞ்சு, மாதுளை மற்றும் இதர பழங்கள் போன்ற பழச்சாறுகள் ஆகிய இயற்கை பானங்களை அருந்தவேண்டும். உப்பு, வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்த இயற்கை பானங்கள் அருந்த வேண்டும். மாத்திரை மருந்துகளைத் தவிர்க்கலாம்.

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT