சைவ வகைகள்

பருப்புப் பொடி

அவசரத்திற்கு உணவு விடுதிக்குச் செல்லாமல் ருசியாக சாப்பிடலாம்.

மரகத மீனாட்சி

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுந்தம்பருப்பு - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 12
பெருங்காயம் - சிறுகட்டி

(பெருங்காயப் பொடிக்குப் பதில் கட்டிப் பெருங்காயம் வாசமாகவும் மருத்துவபலன் அதிகமாகவும் இருக்கும். பெருங்காயம் வாங்கி சிறு

துண்டுகளாகப் பிய்த்து இரண்டு நாள் ஒரு தட்டில் வைத்திருந்தால் காய்ந்துவிடும். பின் ஐந்தறைப் பெட்டியில் போட்டுவிடலாம்).

கல் உப்பு- தேவையான அளவு (அயோடைஸ்டு கல் உப்பில் பலவித உப்பு சத்து உள்ளது.)

செய்முறை

பருப்புகளை வெறும் வாணலியில் மிதமான தீயில் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் மிளகாய் வற்றல், பெருங்காயம், கல் உப்பு மூன்றையும் வெறும்

வாணலியில் வறுக்கவும்.

ஒன்றாக மிக்சியில் அரைக்கவும். சலிக்க வேண்டியதில்லை.

சலிக்க விரும்பினால் மிளகாய் போடாமல் அரை சலித்துவிட்டு அந்த மாவில் சிறிது மிக்சியில் போட்டு மிளக்காயையும் போட்டுத் அரைக்கலாம். இல்லாவிடில்

சலிக்கும் போது மூக்கில் ஏறும்.

சாப்பிடும் முறை:

சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பருப்புப் பொடி போட்டு சுண்டை வற்றல் அல்லது அப்பளம் தொட்டு சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும்.

அவசரத்திற்கு உணவு விடுதிக்குச் செல்லாமல் ருசியாக சாப்பிடலாம்.

மரகத மீனாட்சி ராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT